ரிஷாட் வீட்டுக்கு 11 யுவதிகளை அழைத்து வந்த சங்கர்

0

முன்னாள் அமைச்சரும் பராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டு வேலைக்காக ‘ஷங்கர்’ என்ற தரகர் 11 யுவதிகளை அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்தபோது உயிரிழந்த டயகமையைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான தீவிர விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

குறிப்பிட்ட 10 யுவதிகளிடமும் விசாரணை மேற்கொள்வதற்காக ஹட்டன் மற்றும் டயகம பிரதேசத்துக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் கொழும்பிலிருந்து சென்றுள்ளன எனவும் குறிப்பிட்டார்.