ரிஷாத் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமியை துன்புறுத்தியது யார்?

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமி தொடர்பாக குறித்த சிறுமியின் தாய், ரிஷாத் பதியுதீனின் மனைவியின் தந்தை மற்றும் தாயிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பாக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.