யாழ்.நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு? என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியான வந்த அந்த பெண்ணை கண்ட குறித்த அதிஸ்ரலாபச் சீட்டுக்கள் விற்பனை செய்யும் நபர் மீண்டும் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்துள்ளார்.
உதைத்ததுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத அந்த பெண் அவரை பொலிஸ் நிலையம் வருமாறு கோரி இழுத்துச் சென்றுள்ளார்.
இதன் போது அந்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு கதறியதை அடுத்து அவரை பிழைத்து போகுமாறு சொல்லிய அந்த பெண் இனி இவ்வாறு பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலமை மோசமாகும் என்று எச்சரித்துச் சென்றுள்ளார்.