லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

0

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(புதன்கிழமை)  நடைபெறவுள்ளது.

Jaffna Stallions அணியும் Galle Gladiators அணியும் இன்றைய இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான தொடரில் 5 அணிகள் பங்கேற்றிருந்தன.

Galle Gladiators அணி Colombo Kings அணியை வீழ்த்தியும் Jaffna Stallions அணி Dambulla Viiking அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக Galle Gladiators அணியின் தனுஸ்க குணதிலக்க பதிவாகியுள்ளார். அவர் 9 போட்டிகளில் 475 ஓட்டங்களை குவித்துள்ளார்.

Jaffna Stallions அணியின் வனிந்து ஹசரங்க ஒன்பது போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி, தொடரில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தியவராக பதிவாகியுள்ளார்.