லண்டனில் 10 கொரோனா லோன் போட்டு பெரும்தொகை பணத்தை சுருட்டிய தமிழர்!

0

கொரோனா தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் BBL (பவுன்ஸ் பாக் லோன்) என்னும், கடனை அரசு வங்கியூடாக, வழங்கி வருகிறது. இதில் £2,000 பவுண்டுகள் முதல் கொண்டு £50,000 ஆயிரம் பவுண்டுகள் வரை இதனூடாக கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் அப்பிளை செய்த அனைவருக்கும் இந்த கடனை வங்கிகள் வழங்கத் தொடங்கியது. அதன்பின்னர் 2 வாரம் கழித்தே இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

எனினும் அதற்கு முன்னதாகவே 10 போலி வங்கிக் கணக்கை வைத்து, வட லண்டனில் ஒரு தமிழர் 10 தடவை அப்பிளை செய்து இந்த கடனை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் தனது காரை ஓட்டிச் சென்றவேளை, தற்செயலாக மெற்றோ பொலிடன் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். வழமையாக அவர்கள் காரின் டிக்கியை திறந்து பார்த்தவேளை அதில் பல ஆவணங்கள் வித்தியாசமான பெயரில் ஆனால் ஒரே முகவரியில் இருந்துள்ளது.

அங்கே கொரோனா பவுன்ஸ் பாக் லோன் அப்பிளை செய்யும், படிவம் ஒன்றையும் அவர் பிரதி எடுத்து வைத்திருந்துள்ளார். இதுவே பொலிசாரை அவர்மீது சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.

இதனை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

அத்துடன் அவரது 10 வங்கிக் கணக்குகளையும் பொலிசார் உறை நிலைக்கு கொண்டு சென்றுள்ளதோடு. அதில் இருந்த 550 ஆயிரம் பவுண்டுகளையும் முடக்கியுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.