லீசிங் நிறுவன மோசடி: இறுதி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்

0

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை கடந்த முதலாம் திகதி கையளிக்கப்படவிருந்தது.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதிக்கு பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்தமையால், இறுதி அறிக்கையை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குழுவின் உறுப்பினர் சிறிகுமார குடாகம தெரிவித்துள்ளரார்.

250 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அது குறித்து ஆராயும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானவை தனிநபர் முறைப்பாடுகள் எனவும் குழு கூறியுள்ளது.

மூவரடங்கிய குழுவினால் முறைகேடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து ஆராய்ந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ லக்ஸ்மனால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.