லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

0

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.