வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

0

கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால் சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடன் தகவல் பணியகத்தினால் கடன் செலுத்தாத நபர்களை தவறாக பட்டியலிடாதென அந்த பணியகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவர் கடன் பெற சென்றால் CRIBஇல் பெயர் இருந்தால் கடன் வழங்க முடியாதென கூறுகின்றார்கள். எனினும் நாங்கள் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். அவ்வாறு கூற முடியாது. கடன் வழங்குவதற்கான முழுமையான தீர்மானம் கடன் வழங்கும் நிறுவனத்துடையதாகும்.

CRIBஇல் பெயர் இருந்தால் கடன் வழங்க முடியாதென நிதி நிறுவனங்கள் கூறினால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இல்லை என்றால் வார நாட்களில் எங்கள் அதிகாரிகளை சந்தித்து பேசுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.