வடக்கிற்கு உதவிய கிழக்கின் மைந்தன் இரா.சாணக்கியன்

0

இலங்கையை மாத்திரம் அல்ல முழு உலகத்தினையும் இன்று நிலைகுழைய செய்துள்ளது கொவிட்-19 என்ற கொரோனா.

கொரோனாவினால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் முடங்கியுள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றார் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன்.

உலர் உணவுப்பொருட்களை கடந்த ஒருமாதத்மிற்கும் மேலாக வழங்கி வரும் அவர், தற்போது வடக்கில் உள்ள வறிய மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி சயந்தன் இந்த விடயத்தினை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நிவாரணங்களை வழங்கியுள்ளார்.

அதேபோன்று அம்பாறை, களுத்துறை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அவர் உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார் என்பது விசேடமானது.

பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்கள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டாலும், அவற்றிற்கு தனது செயற்பாடுகள் ஊடாக அதற்கு சிறந்த பதிலினை வழங்கி வருகின்றார் என்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.