வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

0

வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் நேற்று(திங்கட்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.