வடக்கு ஆளுநராக முன்னாள் கட்டளைத் தளபதி நியமனம்?

0

வடக்கு மாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவ பின்னணியைக் கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழல் தற்போது நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் 5ஆவது ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரேவுக்குப் பின்னர், அந்தப் பதவிக்கு கடந்த அரசாங்கத்தின்போது, சுரேன் ராகவன் அமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.