வடக்கு – கிழக்கில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்ற பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் இளைஞர், யுவதிகளுக்காக இலங்கை வான் போக்குவரத்து கல்லூரியை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை வான் போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான வான் போக்குவரத்துக்கான கல்லூரியின் மையத்தை அமைப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துறையாடல் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தகவல் அளித்த ஆர்.பிரேமல் டி சில்வா, இலங்கையில் முதற்தடவையாக தமிழ் இளைஞர்களுக்கான இந்த கல்லூரியை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை வான் போக்குவரத்தின் தார்மீக கடமையாக கருதப்படுகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வானூர்தி நிலையம் அமைந்துள்ள நிலையில் இந்த கல்லூரி நடவடிக்கைகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு அதனுடாக தமிழ்மொழி தெரிந்தவர்களும் தொழில்வாய்ப்புக்கான இணைக்கப்படவுள்ளனர்.

இந்தநிலையில் கல்லூரியின் கட்டிட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை வான் போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்தார்.