வடக்கு மக்களின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை – ரமேஷ் பத்திரன

0

காணாமல் போனவர்கள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (எல்.எல்.ஆர்.சி) மற்றும் பரணகம ஆணையம் போன்ற இலங்கையின் முயற்சிகளை செயல்படுத்துவதில் அரசாஙகம் கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு மக்களின் இதயங்களையும், மனதையும் வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், நாட்டின் ஒரு அங்கம் போல் அவர்கள் உணருவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஒரு நீண்டகால நடவடிக்கையாக, இலங்கையின் உண்மையான நிலைமை குறித்த உண்மைகளை மற்ற நாடுகளுக்கு விளக்க அரசு மீண்டும் நடவடிக்கை எடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.

அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் நாட்டின் நிலைமை குறித்து தெளிவுப்படுத்தப்படும். இதன் போது இருக்கின்ற மிகப் பெரிய சவால் ஐரோப்பிய நாடுகளின் வாக்குரிமையாகும்.

இலங்கையில் அண்மைய காலங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பக்கச்சார்பானவையாகும்.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தவறானவை. ஆகையினால் அது குறித்து நாங்கள் கவலையடைத் தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.