வடக்கு மாகாணத்துக்கு பயண தடை – ஏ9 வீதி மூடப்பட்டது!

0
யாழில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  ஏ  9 வீதி மூடப்பட்டுள்ளது.
 பொலிசாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.