வடக்கு மாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தனது கடமைகளை பொறுப்பேற்றப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது வட.மாகாணத்துக்கென விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுண்டுபோகும் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே வடக்கு மாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.