வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி கொள்ளை

0

யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதிகள் மாத்திரம் வசித்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்கள் இருவரையும் அச்சுறுத்தி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

இதன்போது 7 1/2 பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.