வரலாற்று சாதனை படைத்த பட்டிருப்பு தேசிய பாடசாலை

0

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்/பட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை  களுவாஞ்சிக்குடியில் சிறந்த பெறுபேறுகளை தனதாக்கி வரலாற்று சாதனையை நிலைநாட்டி உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவன் தம்பிப்பிள்ளை தினோஜன் விஞ்ஞானப் பிரிவில் முதல் நிலையினையும், தேசிய ரீதியில் 8 ஆம் இடத்தினையும் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகி பாடசாலைக்கு வரலாற்று பெருமை சேர்த்துள்ளார்.

மகிழூர் கண்ணகி புரம் கிராமத்திலிருந்து வைத்தியதுறைக்கு சூப்பர் மெரீட் எனும் தரத்துடன் தெரிவாகும் முதலாவது மாணவன் இவராவார்.

குமாணவன் தினோஜனின் சாதனையை

இதன்போது பாடசாலை அதிபர், உப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.