எமக்காக நாம் உதவுவோம் வாரீர் அமைப்பின் மனிதநேய வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வழங்கல்.
எமக்காக நாம் உதவுவோம் வாரீர் திட்டத்தில் தேவைப்பாடு உடைய மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் வசிக்கும் குடும்பத்திற்காக கட்டாரில் வசிக்கும் சகோதரர்களால் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வழங்கப்பட் தையல் இயந்திரம் மற்றும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள்
எமக்காக நாம் உதவிடுவோம் தலைமை ஒருங்கிணைப்பாளர் லோகிதராஜா தீபாகரனால் வழங்கிவைக்கப்பட்டன.
இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்ட இவ் உதவி வழங்கல் நிகழ்வில் திசவீரசிங்கம் சதுக்க கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு சே.சந்திரகுமாரன் மற்றும் கூழாவடி இந்து இளைஞர் தலைவர் திரு பத்மராஜா மற்றும் எமக்காக நாம் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.