வவுனியாவில் ஏற்பட்ட பதற்ற நிலை – இராணுவத்தினர் மீது குழுவொன்று துப்பாக்கி பிரயோகம்

0

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்று இரவு 22 பேர் கொண்ட இராணுவ குழுவினர் மீது இந்த மூவரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் காயம் அடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த மூரில் ஏனைய இருவரும் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்பவதற்கான நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.