வவுனியாவில் கடையடைப்பு: பொலிஸார் கடைகளை திறக்குமாறு அறிவிப்பு

0

வடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார், வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக சென்று திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர்

இதேவேளை  வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், வவுனியாவில் முச்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரச திணைக்களங்கள் உணவகங்கள் வழமைபோல் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.