வாகன இறக்குமதிக்கான தடை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

0

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பது என நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த தடை காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என அமைச்சு கூறியுள்ளது.

மேலும் நாட்டில் தேவையான அளவுக்கு வாகனங்கள் இருப்பதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைவான வாகனங்களே கையிருப்பில் இருப்பதால், புதிய மற்றும் பழைய வாகனங்களின் விலைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.