வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

0

பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐவர், 5000 ரூபாயை கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற சந்தர்ப்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பாடுகளை முன்னெடுப்போர் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.