வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம்

0

பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.