வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வாரம் அளவில் சகல மாவட்டங்களுக்கும் வாக்கு அட்டைகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார்.
2020 பொதுத் தேர்தலுக்காக சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான மாதிரி வாக்களிப்புக்கள் 15 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வார இறுதியில் இடம்பெறவுள்ளது. கொவிட்-19 தொற்று பரவலை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு மாதிரி வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன.
மாத்தளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தறை, காலி, மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, களுத்துறை, புத்தளம், மன்னார், கொழும்பு, கம்பஹா, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மாதிரி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
கடந்த 7ஆம் திகதி காலி அம்பலாங்கொட கிராம சேவையாளர் பிரிவில் இவ்வாறான மாதிரி வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.