வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

0

வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, தற்போது அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் கம்பஹா மாட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.