வாழைச்சேனை – புனானை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் இலத்திரனியல் உபகரணங்களை திருடிய நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சைபெற்று குணமடைந்த நால்வரே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் மூவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மஸ்கெலியாவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.