வாழைச்சேனையில் மரக்கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை தேக்கு மரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிரான் பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மரக்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை வன இலகாவும் வாழைச்சேனை பொலிஸாரும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்கீழ் கிரான் பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியூடாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பல இலட்சம் ரூபாய் பெறுதியான பல மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை கொண்டுசென்ற உழவு இயந்திரமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.