வாழைச்சேனை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு, X-ray பிரிவு திறந்து வைப்பு

0

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் X-RAY பிரிவு என்பன திறந்து வைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் அதிகாரி, வைத்தியர் தயாளினி சசிக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருந்தக களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா காலங்களில் பணிபுரிந்த வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக பாராட்டுச் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.