மருதமுனை- துறைநீலாவணை இணையும் களப்பு பகுதியிலுள்ள மதகு ஒன்றின் அருகில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு, பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று (திங்கட்கிழமை) இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
யுத்த காலங்களில் பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து தாக்குவதற்கு விடுதலைப்புலிகள் அக்காலத்தில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட துப்பாக்கி துருப்பிடித்து மீள இயக்க முடியாமல் காணப்படுகிறது.
மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாதிகாரி எம்.எச்.அமில மதுரங்க வழிகாட்டலில் தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி, விசேட அதிரடிப்படையினரின் முகாமில் பாராப்படுத்தப்பட்டுள்ளது.