விடுதலைப் புலிகளை புகழ்வோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

0

“தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஆதரித்துப் பேசினாலோ அல்லது விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.”

இவ்வாறு பொதுமக்கள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து பேசினால் அவர்களின் எம்.பி. பதவியைக் கூட இரத்துச் செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஆராயப்படுகின்றது.

ஜேர்மனியில் எவ்வாறு நாஸி கட்சி பற்றியோ, ஹிட்லர் பற்றியோ பேசினால் அங்கு எவ்வாறு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ அதேபோன்று இலங்கையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டாலும் கூட அவர்களின் கொள்கை இன்னமும் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகள் இன்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” – என்றார்.