விடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம் – தேர்தல்கள் ஆணைக்குழு

0

2020 நாடாளுமன்றத் தேர்தலில் 80-85 விகிதமான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவத் தளபதியால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களைப் பெற்று பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படவில்லை என்றால் அதுதொடர்பாக தொழிலார்கள் அமைச்சிற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினை வழங்க முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.