விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பினர்!

0

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 9 பேர் சிங்கப்பூரிலிருந்து வருகைதந்துள்ளதுடன், ஓமானிலிருந்த ஐவர் டோகா கட்டாரினூடாக நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் சர்வதேச விமான நிலையங்களில் சிக்குண்டிருந்த 33 பேரில் 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே மூவர் மாலைதீவு மற்றும் துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஏனைய 16 இலங்கையர்களையும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார்.