விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிய நால்வர்

0

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நால்வர் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரிகளான வெல்லே சாரங்க என்பவரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.