கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.
விமான நிலைய வளாகத்தில், பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில், விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்திருந்தார்.