விமான நிலையத்தை திறந்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

0

இலங்கையின் சுகாதாரத் தரப்பினரது ஆலோசனைக்கமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாத்துறைச் சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதாரத் தரப்பினருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தற்போது 80 சுற்றுலாத்துறை பாதுகாப்பு மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் ஒரு சில நாடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் விமான நிலையத்தைத் திறப்பதன் அவசியம் குறித்து ஆராயப்படுகிறது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுவாத்துறையை வெகுவிரைவில் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

விமான நிலையத்தைத் திறத்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை மற்றும் அவை சார் நிறுவனங்கள் பல திட்டங்களை வகுத்துள்ளன.

இத்திட்டங்கள் சுகாதார தரப்பினரால் ஆராயப்படுகிறது.

சுகாதார தரப்பினரது அனுமதியுடன் விரைவில் விமான நிலையம் திறக்கப்பட்டு சிவில் விமான சேவை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படும் என்றார்.