விமான பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

0

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளது.

விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.