வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சுப்பதவி!

0

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவியேற்றுக்கொண்டுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தபால் மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக குறித்த பதவியும் இணைக்கப்பட்டுள்ளது.