விளையாட்டுக்கழகங்கள் கல்வி கலை செயற்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

0

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழக வீரர்களுக்கான சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

விளையாட்டுக்கழக தலைவர் சுந்தரலிங்கம் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன், சிவசக்தி விளையாட்டுக்கழக சிரேஸ்ட வீரர் ஆனந்தராசா, விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பயாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சீருடையினை வழங்கி வைத்து உரையாற்றிய சாணக்கியன் விளையாட்டுக்கழகம் தனியே விளையாட்டுக்களில் மாத்திரமே கவனம் செலுத்தாது கல்வி கலை கலாச்சார விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று விளையாட்டுக்கழகங்களுக்கு வழங்கப்படும் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தற்காலிகமானது.

நீங்கள் இதன் மூலம் சிறந்த பயிற்சியை பெற்று வெற்றிகளை மாத்திரமே பெறுவது முக்கியமல்ல, நாளை இதே போன்ற உதவிகளை நீங்களும் முன்னெடுக்க வேண்டும்.

சீ.மூ.இராசமாணிக்கம் தொண்டு அமைப்பு மக்களுக்கானது வாழ்வாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதே பிரதான இலக்காக கொண்டது. கல்வி விளையாட்டு முன்னேற்றத்துக்குமாக இளைஞர்களுக்கும் பணியாற்றுகிறது.

இந்த வேலைத்திட்டங்களை சொல்லலாம் தேர்தலுக்கானது என்று இல்லை, நான் நான் இல்லாது போனாலும் வெற்றிபெற்றாலும் வெற்றி பெறாவிட்டாலும் இன்னும் 50ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு தனது சேவைவை தொடரும் .

துறைநீலாவணைக் கிராமம் படித்தவர்களை உயர் பதவிகளில் உள்ளவர்களை கொண்டது பழமையான கிராமம் தமிழ்தேசியத்தோடு ஒன்றினைந்து பயணிக்கும் கிராமம், அந்த பயணத்தை இளைஞர்களும் வலுச்சேர்ப்பார்கள் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டார்.