விளையாட்டு மைதானத்தினை அபகரிக்க முயற்சி- திருகோணமலை- அனந்தபுரியில் பதற்றம்!

0

திருகோணமலை – அனந்தபுரி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில், ஞாயிற்றுக்கிழமை அடாத்தாக வேலி அமைக்க, சிலர் முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக அனந்தபுரி பகுதியிலுள்ள குறித்த மைதானம் அப்பகுதி இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த மைதானத்திற்கு பின்புறமாக உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காணிக்கு அருகே குறித்த கட்சியினரால் இன்று காலை வேலி அமைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்தே குறித்த கட்சியினருக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முருகல் நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மைதானமானது பல அரசியல் தலைமைகளது உதவியுடன் புனரமைக்கப்பட்டு, தற்போதும் இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க இதனை அபகரிக்க பலர் முற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

மேலும் மைதானம் இல்லாது போனால், இளைஞர்கள் பிழையான வழிமுறைகளுக்கு உட்படக்கூடும் என்பதால், மைதானத்தினை மீட்டுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.