விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான அறிவித்தல்

0

2020 ஜுன் மாதத்திற்கான விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 

இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் தலைவர் மகேந்திர ஹரிசந்திர தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளவுள்ள அனைத்து விவசாய ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகள் மற்றும் கடற்றொழிலாளர்களில் ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியத்தை செலுத்தவதற்குத் தேவையான மானியத்தை இந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர யாப்பா விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் மற்றும கடற்றொழில் ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதியத்திற்கு உரித்தான அனைத்து ஓய்வூதிய பயனாளிகளும் தமக்கு உரித்தான தபால் அலுவலகங்கள் மூலம் இந்த மாதம் 20ஆம் திகதியான திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித சிரமங்களுமின்றி சம்பந்தப்பட்ட ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று பிரேமசந்திர யாப்பா இந்த அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.