வீடுகளிலிருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு விரைவில் வழிகாட்டல் கோவை

0

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை வீடுகளில் இருக்கும் கொரோனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பான சுகாதார வழிகாட்டல் கோவை தயாரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையொன்று கிடைக்கும் வரை அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிப்பது தொடர்பில், இந்த வழிகாட்டல் கோவை தயாரிக்கப்பட மாட்டாதெனவும் அவர் கூறியுள்ளார்.