வீடுகளில் தங்கியிருங்கள்! கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

0

கொழும்பு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த மேல் மாகாணமும் கொரோனா வைரஸ் முழுமையான எச்சரிக்கை உடைய பகுதிகளாக அடையாளம் கணப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேல் மாகாணம் தவிர்த்து ஏனைய மாகாணங்களில் கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் சற்று குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

விசேடமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதி மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தங்கியிருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.