வீடுகளை விட்டு வெளியேறவும் கடும் தடை

0

நாட்டில் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் உள்நுழைவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளை விட்டு வெளியேறவும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.