வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு

0

அரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரையான வார நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அபாய வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.