வீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்

0

நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

“செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் – விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவெலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இணையத் தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத் தளத்தில் – வீட்டு தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரம் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு – வீட்டுத் தொட்டத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.