வீட்டுக் கடனுக்கான புதிய வட்டி வீதம் குறித்த அறிவிப்பு வெளியானது!

0

தமது சொத்துக்களை வைத்து, பெற்றுக்கொள்ளப்படும் வீட்டுக் கடனுக்காக அதிக்கூடிய வட்டியாக 7 வீதத்தை மாத்திரம் அறவிடுமாறு வணிக வங்கிகளுக்கு, இலங்கை மத்திய வங்கி அறிவிக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை கூடிய வேளையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன்படி, கடன் கால எல்லையில் முதலாவது ஆண்டுக்காக 7 வீத வட்டியை மாத்திரமே அறவிட முடியும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள கடன் செலுத்தும் கால எல்லையில் சாதாரண தொகை அறவிடப்படுவதுடன், மேலதிகமாக 1 வீதத்தை மாத்திரமே வட்டியாக அறவிட முடியும் என கூறப்படுகின்றது.

இதற்காக ஆலோசனைகள் விரைவில் மத்திய வங்கி ஊடாக, வணிக வங்கிகளுக்கு அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.