வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோருக்கு எதிராக நடவடிக்கை!

0

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நாட்டின் 19 மாவட்டங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் சரியான முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிந்து, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நபர்களை திருப்பியனுப்ப பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக முக கவசத்தை அணியாமல் வீதிகளில் பயணிப்போரை திருப்பி அனுப்ப நடவடிககை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.