வீதி ஒழுங்கு விதியை மீறும் சாரதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
இதனிடையே, வீதி ஒழுங்கு விதிமுறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை ஆராய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட 20 இடங்களில் பொலிஸ் அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளின் நிலையைக் கண்காணிக்க விமானப்படையின் 4 ட்ரோன் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.