வீதி ஒழுங்கை சட்டத்தில் திடீர் மாற்றம்!

0

கொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட குறித்த திட்டம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே இந்ததத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் செல்ல வேண்டும் என அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டம் இன்று முதல் தளர்த்தப்படவுள்ளது.