வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரம் – புதிய யோசனையினை முன்வைக்கப்போகும் ரணில்

0

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய யோசனை ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக போராட அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான யோசனையைனை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்க முன்னர் நாட்டு மக்களுக்கு இது குறித்து அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிதி பயன்பாடு மற்றும் அதிகாரம் தொடர்பாக அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக ஆலோசனை ஒன்றினையும் ரணில் விக்ரமசிங்க வழங்கவுள்ளார்.